வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (18:06 IST)

ஆஸ்ரம பள்ளி மூடல் ; வதந்திகளை நம்ப வேண்டாம் - லதா ரஜினிகாந்த் கோரிக்கை

நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ஆஸ்ரம பள்ளி மூடப்பட்டது சார்பாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.


 

 
கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரமம் பள்ளி ஒன்று பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நிர்வகித்து வருகிறார். இந்த பள்ளிக்கு பல வருடங்களாக பல கோடி ரூபாய் வாடகை கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், இன்று காலை, பள்ளியை அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என கட்டிட உரிமையாளர் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து, அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின் அந்த மாணவர்கள் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.


 

 
இந்நிலையில், பள்ளி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை, இது தொடர்பாக வெளிவரும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல்,   ரஜினி சார்பில் பள்ளியின் முதல்வர் மற்றும் லதா ரஜினியின் வக்கில் ரவிச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது “பள்ளி நிர்வாகத்தின் மீது நில உரிமையாளர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மாதா மாதம் வாடகை தரப்பட்டு வரும் நிலையில் நிர்வாகத்தை இழிவுப்படுத்த இந்த மாதிரி செய்திகளை பரப்பி வருகிறார். நிச்சயம் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்காது, மாற்று இடத்தில் செயல்படும்” என்றார்.