Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு!


Caston| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (12:05 IST)
ஈரோட்டில் பள்ளி மாணவி ஒருவருக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திராமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

 
 
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பூதப்பாடியில் உயர்நிலை பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார் அந்த சம்பந்தப்பட்ட மாணவி. இவரிடம் உடற்கல்வி ஆசிரியர் தவறாக நடந்து வந்துள்ளார். ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை தருவதை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த அந்த மணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
 
தற்கொலைக்கு முயன்ற மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர்களிடம் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார் அந்த மாணவி. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்களும் அந்த பகுதி மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு அந்த ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க முறையிட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் பதில் ஏதும் கூறாததால் பள்ளி மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :