வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (12:56 IST)

அமித்ஷாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலையா?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறிவிட்ட நிலையில் தமிழக அமைச்சரவை கூடி இதுகுறித்து ஒரு தீர்மானத்தை இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் இன்னும் முடிவெடுக்காத நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய கடந்த பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் செய்து வருகிறார் அவரது தாயார் அற்புதம்மாள்
 
முதல்வர், கவர்னர் உள்பட பல பிரமுகர்களை அவர் சந்தித்து தனது வேண்டுகோளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை 11 11 45 மணிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை எம்பியுமான திருமாவளவன் உடன் இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
அமித்ஷாவை அற்புதம்மாள் சந்தித்து பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தனது கோரிக்கையை விடுத்துள்ள நிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வரும் 7 பேர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்