வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (19:15 IST)

இனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது பேசிய அமித்ஷா “சரியான குடிமக்களின் பெயர் மட்டுமே பட்டியலில் இடம்பெற வேண்டும் என நினைக்கிறோம். ஆகவே அத்துமீறி இந்தியாவில் வசித்து வருபவர்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். அதில் சட்டவிரோதமாக மற்றும் ஊடுருவி இந்தியாவில் வசித்து வருபவர்கள் சர்வதேச குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள். இதற்காக ஜூலை 31 வரை நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளோம்.” என்று கூறினார்.

பிறகு பேசிய உள்துறை இணை அமைச்சர் ”சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பட்டியலில் குடிமக்களின் பெயர்களும் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக 25 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அவற்றை கணக்கில் கொண்டு சரியான முடிவு எடுக்க வேண்டும்” என கூறினார்.