வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (17:38 IST)

மார்ச் 2ஆம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும்..! சேலம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

annamalai
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக 3 மாத கால அவகாசம் கோரியதை சேலம் நீதிமன்ற நீதிபதி நிராகரித்ததுடன், சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் மார்ச் 2ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். 
 
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ், சேலம் ஜேஎம்4 நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார்.
 
அதில், அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 
 
இதனிடையே இந்த வழக்கில் நேரில் ஆஜராக மூன்று மாதம் கால வாசம் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

 
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், மார்ச் இரண்டாம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.