1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:21 IST)

என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது: பாஜக தலைவர் அண்ணாமலை

என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் நான் என்ன பேசினாலும் பொது வெளியில் கசிந்து விடுகிறது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் பாஜக மிகவும் மோசமான நிலையில் இருந்ததை அடுத்து அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தற்போது எழுச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் செல்போனில் யாரிடமும் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
தொலைபேசியில் நான் என்ன பேசினாலும் அது பொது வெளியில் கசிந்து விடுகிறது என்றும் இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.