செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:56 IST)

குண்டு வீசியதற்கு நீட் தேர்வை காரணம் கூறுவதா? அண்ணாமலை கண்டனம்

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீசிய பாபு என்பவர் நீட்தேர்வு ஆதரித்து அண்ணாமலை பேசியதால்தான் கொண்டு குண்டு வீசினேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதூ. இந்த நிலையில் இது நகைச்சுவைக்கு உரியது என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
 
நேற்று நள்ளிரவில் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த நிலையில் இன்று அவர் கைது செய்யபட்ட நிலையில் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் அண்ணாமலை அவர்கள் நீட் தேர்வை  ஆதரித்து பேசியதால் தான் குண்டு வீசினேன் என்று கூறினார் 
 
இது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை இது மிகுந்த நகைச்சுவைக்கு உரியது என்றும் இந்த குண்டு வீச்சு குறித்து உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்.ஐ.ஏ  விசாரணை தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்