1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:33 IST)

முதல்வர் ஸ்டாலின் சொத்து பட்டியலை வெளியிடுவேன்: அண்ணாமலை அதிரடி

annamalai
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அண்ணாமலையின் வாட்ச் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதை அடுத்து அண்ணாமலை தனது சொத்து பட்டியலை வெளியிட இருப்பதாக கூறியிருந்தார்
 
அதேபோல் திமுகவினரும் தங்களது சொத்து பட்டியலை வெளியிட தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சொத்துகளை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் 
 
எனது சொத்து கணக்கை வெளியிடும் அதே நாளில் முதல்வர் ஸ்டாலின் திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் உறவினர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்
 
முதல்வர் முக ஸ்டாலின் சொந்தகார் கூட இல்லை என்று தேர்தல் ஆணையத்தில் சொல்லியிருந்தார் என்றும், அவர் எந்த கார் வைத்து உள்ளார் என்பதையும் நான் சொல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

 
Edited by Mahendran