''நம்ம ஸ்கூல் ''திட்டத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் நிதியுதவி
நம்ம ஸ்கூல் என்ற திட்டத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்,அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வ்அகையில், நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, இதற்கான இணையதளத்தையும் அறிமுகம் செய்தார்.
அப்போது அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவவோம், நான் விரும்பும் கனவுப் பள்ளியை உருவாக்குவோம் என்று கூறிய முதல்வர், இந்தத் திட்டத்திற்கு தனது சொந்தப்பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் நிதியை முதல்வர் முக.ஸ்டாலின் வழங்கினார்.
இடத்திட்டத்தின் தூதுவராக பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்ய, திரைத்துறையினர், வணிகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டடுள்ளார்.
Edited By Sinoj