திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (13:43 IST)

அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க வேண்டும்: அண்ணாமலை

annamalai
அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவின் இரண்டு அணிகள் தனித்தனியாக போட்டியிடும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தனித்து களமிறங்கியுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஒன்றுபட்ட அதிமுக தேவை என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் அண்ணாமலை கூறியபடி அதிமுக ஒன்றிணையுமா? அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran