ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (14:32 IST)

பாஜக போட்டியிட்டால் அதிமுக வேட்பாளர் வாபஸா? ஜெயகுமார் விளக்கம்!

jayakumar
பாஜக போட்டியிட்டால் அதிமுக வேட்பாளர் வாபஸ் செய்யப்படுவார் என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்த நிலையில் பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றும் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் நிலையில் பாஜக தன்னுடைய நிலையை தெரிவிக்காத நிலையிலேயே அதிமுக வேட்பாளரை அறிவித்துவிட்டது. இந்த நிலையில் திடீரென டெல்லி  சென்று அண்ணாமலை இது குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் பாஜக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவிக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை திரும்ப பெற மாட்டோம் என்றும் அதிமுக போட்டியிடுவது உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் மூன்று முறை கூட்டணி பெயர் மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ஜெயக்குமார் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கும் அவர் மழுப்பலாக பதில் கூறினார்.
 
Edited by Mahendran