திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (07:58 IST)

2024ல் தமிழகத்தில் 25 பாஜக எம்.பி.க்கள் இருப்பார்கள்: அண்ணாமலை

Annamalai
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் 25 பாஜக எம்பிக்கள் இருப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கும்பகோணத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2 ஆண்டு கால சாதனைகளை விளக்கினார்
 
அதன்பின் திமுக ஆட்சியில் நிம்மதியாக இருக்கும் ஒரே குடும்பம் கோபாலபுரம் என்றும் சாதாரண குடும்பத்தினருக்கு நிம்மதி இல்லை என்றும் தெரிவித்தார் 
 
2024 ஆம் ஆண்டு 400க்கும் மேற்பட்ட எம்பிக்களுடன் பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் தமிழகத்தில் மட்டும் குறைந்தது 25 எம்பிக்கள் இருக்கின்றோம் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்