திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (17:23 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அண்ணாமலை போட்டியா?

Annamalai
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவேரா என்பவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த தொகுதி மீண்டும் திமுக கூட்டணியின் காங்கிரஸுக்கு கிடைக்கும் நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவுக்கு கொடுக்கப்படும் என்றும் குறிப்பாக அண்ணாமலை இந்த தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. 
 
கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அதிமுக வலுவாக இருக்கும் நிலையில் அண்ணாமலை போட்டியிட்டால் நிச்சயம் அந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. தமிழக அரசியலில் இந்த இடைத்தேர்தல் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran