வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (12:50 IST)

பத்திரிக்கையாளர்கள் நடந்து கொண்டது தவறு: புதிய தலைமுறை நிறுவனர் பச்சைமுத்து பேட்டி

annamalai
அண்ணாமலை இடம் பத்திரிகையாளர்கள் நடந்து கொண்டது தான் தவறு என புதிய தலைமுறை நிறுவனத்தின் நிறுவனர் பச்சமுத்து அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை எச்சரிக்கை செய்ததாகவும் மிரட்டியதாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.  குறிப்பாக புதிய தலைமுறை செய்தியாளர் அண்ணாமலை இடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் 
 
இந்த நிலையில் புதிய தலைமுறை நிறுவன தலைவர் பச்சமுத்து அவர்கள் இதுகுறித்த பேட்டியில் ’பத்திரிகையாளர்கள் நடந்து கொண்டால் தான் தவறு என்றும் அண்ணாமலை அவர்கள் மிகத் திறமையானவர், மிகச் சிறந்த அறிவாளி என்றும், சின்ன வயதில் மிகப் பெரிய பதவிக்கு வந்தவர் என்றும் அவர் அனைத்து கேள்விகளுக்கும் டேட்டாக்களை கையில் வைத்துக்கொண்டு பதில் சொல்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பத்திரிகையாளர்கள் மாறி மாறி கேள்வி கேட்பதால் ஒரு சில சமயம் கோபமாக இருக்கலாம் என்றும் பத்திரிகையாளரும் கொஞ்சம் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva