Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செங்கோட்டையன் சவாலை ஏற்ற அன்புமணி! பரபரப்பில் தமிழகம்


sivalingam| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (08:01 IST)
பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள்,  தம்முடன் அந்த துறை குறித்து பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று கல்வித்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் சவால் விட்டிருந்தார். 


 
 
இந்த சவாலுக்கு எந்த ஒரு அரசியல்வாதியும் ரியாக்சன் காட்டாத நிலையில் முதன்முதலாக அன்புமணி ராமதாஸ் இந்த சவாலை ஏற்றுள்ளார். இடம் மற்றும் தேதியை அறிவித்தால் சவாலை சந்திக்க தயார் என்று அவர் அறிவித்துள்ளார். 
 
பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றி சமீபகாலங்களில் தங்கள் கட்சி முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உறுதி செய்ய தன்னால் முடியும் என்றும்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சவாலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருப்பதாகவும் அன்புமணி மேலும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :