புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (12:07 IST)

மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து தியானம் செய்த அகோரி

திருச்சியில் மரணமடைந்த தாயின் உடலின் மீது அமர்ந்து அகோரி ஒருவர் தியானம் செய்ததை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
திருச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஒரு அகோரி. மணிகண்டன் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையிலுள்ள ஜெய் அகோர காளி கோவிலை நிர்வாகித்து வருகிறார்.
 
இந்நிலையில் மணிகண்டனின் தாய் நேற்று மரணமடைந்தார். இறுதி சடங்கிற்கு பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருந்தது. இடுகாட்டிற்கு வந்த மணிகண்டன் தன் தாயின் உடல் மீது அமர்ந்து தியானம் செய்தார். பின் சில மந்திரங்களை ஓதி பூஜையும் செய்தார். 
 
இவ்வாறு செய்வதன் மூலம் தனது தாயின் ஆன்மா இறைவனை சென்றடையும் என கூறினார். இதனை அப்பகுதி மக்கள் விசித்திரத்துடன் பார்த்து சென்றனர்.