திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (09:38 IST)

22 நாள் கைக்குழந்தையை பரிதவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்

குடியாத்தத்தில் பிறந்து 22 நாட்களே ஆன கைக்குழந்தையை பரிதவிக்கவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டங்களில் காதல் திருமணங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காதலிக்கும் போது காதலர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், விட்டுக் கொடுக்கும் தன்மை திருமணத்திற்கு பின் காணாமல் போய்விடுகிறது. இதனால் விவாகரத்துக்களும், பல தற்கொலைகளும் நடக்கிறது.
 
குடியாத்தத்தை சேர்ந்த சந்துரு என்ற வாலிபரும் ஜனனி என்ற இளம்பெண்ணும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
 
இந்நிலையில் கடந்த 22 நாட்களுக்கு முன்னர் ஜனனி ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பின்னர் ஜனனி தன் தாய் வீட்டிற்கு வந்தார்.
 
இதற்கிடையே நேற்று வீட்டில் யாருமில்லா நேரத்தில் ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரது பெற்றோர் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜனனியின்  தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.