1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (16:17 IST)

எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு: அமமுகவினர் சதியா?

முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காரின் மீது செருப்பு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
டிடிவி தினகரன் தூண்டுதலின் பெயரில் அமமுகவினர் எடப்பாடி காரின் மீது செருப்பு மற்றும் கற்களை வீசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு தடி கம்பு கட்டை ஆகிய ஆயுதங்களை அமமுகவினர் எடுத்து வந்ததாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமமுகவினர் கொலை மிரட்டல் எச்சரிக்கை கொடுத்துள்ளதாகவும் அதிமுக தனது புகாரில் தெரிவித்து உள்ளது
 
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திரும்பி காரில் திரும்பிச் சென்று கொண்டிருக்கும்போது அவருடைய கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது