வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:09 IST)

எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தனி உதவியாளர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர் தலைமறைவாக இருந்ததாகவும் தற்போது அவர் அவரது வீட்டில் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மாலிக் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.