வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (11:22 IST)

வருகிறது அம்மா எக்ஸ்பிரஸ்?: அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்!

மக்களவையில் நேற்று நடந்த பொது விவாதத்தின் போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் அம்மா எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
 
அதிமுக அரசில் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதற்கு அம்மா என்ற பெயரை வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் இந்த அம்மா புகழ் தற்போது நாடாளுமன்றத்திலும் நுழைக்க முயன்று வருகிறார்கள்.
 
மக்களவையில் பொது விவாதத்தின் போது பேசிய பொள்ளாச்சி தொகுதி அதிமுக எம்.பி சி.மகேந்திரன், பொள்ளாச்சி-பொத்தனூர் இடையே அகல ரயில் பாதை திட்டத்தை விரைவாக முடித்து, அந்த வழித்தடத்தில் மின்மயமாக்க பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்றார்.
 
மேலும், சென்னை - பொள்ளாச்சி இடையே அம்மா எக்ஸ்பிரஸ் என்னும் பெயரில் புதிய ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொள்ளாச்சி - பெங்களூர் இடையே ஆனைமலை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய ரயில் இயக்க வேண்டும் எனவும் இந்த கோரிக்கைகளை ரயில்வே அமைச்சர் விரைவாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்க விடுத்தார்.