செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (10:58 IST)

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
மாணவர்கள் போராட்டம் காரணமாக அமெரிக்கன் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி விட்டு ஆஃப்லைனில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டனர்
 
இதனை தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.