1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (17:10 IST)

200 இடங்களில் வெற்றி என்பது திமுகவின் பகல் கனவு: எடப்பாடி பழனிசாமி

2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுகவினர் கூறி வரும் நிலையில், அது பெரும் பகல் கனவு என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று திமுக பகல் கனவு காண்கிறது. உங்களுடைய கனவு ஒருபோதும் பலிக்காது. 200 இடங்களில் வெற்றி என்பது அதிமுக கூட்டணிக்கே பொருந்தும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 234 தொகுதிகளிலும் வரும் ஜனவரி மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, "2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் ஆக இருக்கும்," என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, 2026 இல் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமையும் என்றும், மக்களும் தொண்டனும் எதிர்பார்க்கும் விரும்புகிற கூட்டணி உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சூழல் வைத்தார்.


Edited by Siva