ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:07 IST)

விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்- ஓ.பன்னீர்செல்வம் தகவல்

panner selvam
விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் எனப் பிரிந்திருந்த நிலையில் சசிகலா, தினகரனை கட்சியைவிட்டு நீக்கியபின், இருவரும் இணைந்து பணியாற்றி வந்தனர்.

இரு தரப்பினர்க்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்குகளும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மூன்று அணிகளாக உள்ளது.
 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஒபிஎஸ், சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போது அரசியல் பற்றி பேசவில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

மேலும், விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  மற்றும் புதிதாக அதிமுகவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.