ஊருக்கு உபதேசம் இனி செல்லாது : துரைமுருகனுக்கு ஹெச்.ராஜா டுவீட் !
தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக, சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டது. இந்த நிலையில் இரு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் அவ்வப்போது முரண்பாடான கருத்துகளை வெளியிட்டாலும் கூட கூட்டணியிலேயே நீடிக்கின்றனர்.
மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் அதிமுக அரசு ஆதரவு அளித்துள்ளது.
ரஜினி பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்களும் ரஜினியின் கருத்துக்கு விமர்சனம் தெரிவித்தனர். ஆனால் ரஜினியின் பேச்சுக்கு ஹெச்.ராஜா, போன்ற சிலர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்தித் திணிப்பை எதிர்க்க அதிமுகவுக்கு தைரியம் உண்டா என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாவது :
முதலில் இவரது குடும்பம் நடத்தும் இந்தி மொழி கற்பிக்கும் பள்ளியை சமச்சீர் கல்வி பள்ளியாக மாற்றும் தைரியம் உண்டா துறைமுருகன் அவர்களுக்கு. ஊருக்கு உபதேசம் இனி செல்லாது என தெரிவித்துள்ளார்.