1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (14:10 IST)

காவிரி விவகாரத்தில் பொங்கி எழுந்த அதிமுக எம்பிக்கள்; முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. 

 
2018ஆம் ஆண்டுக்கான கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எம்பி மைத்ரேயன் தலைமையில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இவர்களை தொடர்ந்து அந்திர மாநில எம்பிக்கள் மற்றும் கங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமை முதல்வர் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
 
அப்போது அனைத்தும் எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும் பிரதமர் மோடி, முதலமைச்சர் தலைமையிலான குழுவை சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு அவமானம் என்று கூறினார். இந்த கருத்தால் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் இடையே கருத்து போர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று அதிமுக எம்பிக்கள் காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.