வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (16:30 IST)

நீங்கள் ஏன் அணைகள் கட்டக்கூடாது? தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்

காவிரி மேலாண்மை அமைக்க கோரிய வழக்கில் புதிய அணைகள் ஏன் கட்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது.


 

 
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, புதிய அணைகள் கட்ட புவியியல் அமைப்பு இல்லை என தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு மற்றும் ஆந்திர அரசு அணைகள் கட்டினால் தமிழக அரசும் கட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்கள் அணைகள் கட்டினால் தமிழகத்திறகு வரக்கூடிய தண்ணீர் வராது. ஆனால் உச்ச நீதிமன்றம் ஏன் இந்த கேள்வியை தமிழக அரசிடம் எழுப்பியுள்ளது.
 
காவிரி மேலாண்மை அமைக்க கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நெடுங்காலமாக போராடி வருகிறது. போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளும் இந்த கோரிக்கையை முன வைத்துள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இதுபோன்ற கேள்வி அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 
மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.