திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (12:28 IST)

கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்: என்ன காரணம்?

admk mlas
கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்: என்ன காரணம்?
தமிழக சட்டசபைக்கு இன்று எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை உடன் சட்டசபைக்கு வந்தனர்.
 
 எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி குறித்து சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்ததாக கூறப்படுகிறது. 
 
இருப்பினும் இன்றும் சபாநாயகர் அப்பாவு அவர்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி குறித்த முடிவை எடுக்க வாய்ப்பு இல்லை என்று சட்டமன்ற வளாகத்தில் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran