செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:58 IST)

முதல்வர் முக. ஸ்டாலினை பாராட்டிய நடிகர் சத்யராஜ்!

இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில்,   முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொடுத்த உரையை ஆளுனர் முழுமையாக வாசிக்கவில்லை. அவர் உரையை வாசிக்கும்போது, தமிழ் நாடு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை வாசிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து விவாதம் எழுந்த நிலையில் ஆளுனர் திடீரென்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்.

அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ஓபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆளுனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  நேற்றைய சட்டசபை நிகழ்வின்போது, ஆளுனர் வெளி நடப்பு செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் சிரித்தார். இதுகுறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலானது.
 

இந்த நிலையில்,  நேற்றிய சட்டப்பேரவை நிகழ்வுகளை குறிப்பிட்டு நடிகர் சத்யராஜ் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார், மேலும், முதல்வரின் சிரிப்பு தன்னை கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.