ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (14:16 IST)

அவைத்தலைவர் நான் தான்: மதுசூதனன் திட்டவட்டம்!

அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது; நான் இருக்கும் வரை அவைத்தலைவராகத்தான் இருப்பேன். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் இருவரையும் சந்தித்து பேசி வருகின்றனர். 
 
இதனிடையே உடல்நிலை குறைபாடு காரணமாக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா கொடுத்தது. நான் இருக்கும் வரை அவைத் தலைவராகத்தான் இருப்பேன். அதிமுக அவைத்தலைவராக நான் தான் நீடிப்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். 
 
அதோடு, ஓ.பி.எஸ். எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார் எனவும் அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.