1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (19:21 IST)

சத்யம் தொலைக்காட்சியில் மர்ம நபர் தாக்குதல்: அதிமுக கண்டனம்!

சென்னையில் உள்ள சத்யம் தொலைக்காட்சி அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது 
 
தமிழகத்தில் பல்வேறு காட்சி ஊடகங்கள் செய்தி சேனல்கள் இயங்கிவருகின்றன. மத சார்புடைய காட்சி ஊடகங்களும் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட ஊடகங்களில் ஒன்றான சத்யம் தொலைக்காட்சி நிலையத்தை தனிநபர் ஒருவர் நேற்று கையில் ஆயுதங்களுடன் தாக்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன
 
இச்செயலை அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தொலைக்காட்சி நிலைய தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பின்புலத்தை ஆராய்ந்து இனியும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது