செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (13:56 IST)

அதிமுக செய்த செலவு, வைத்த கடன், கஜானா நிலை என்ன? – வெளியாகிறது வெள்ளையறிக்கை!

தமிழகத்தில் பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் ஆகஸ்டு 13 அன்று முதல் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்கும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும்.

ஆனால் அதற்கு முன்னதாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட செலவினங்கள், வருவாய், கடன் சுமை மற்றும் தற்போதைய கஜானா இருப்பு ஆகியவை குறித்த 120 பக்க வெள்ளை அறிக்கையை ஆகஸ்டு 9ம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார். இதில் துறைரீதியான செலவினங்கள், வருவாய் இழப்பிற்கான காரணங்களும் விளக்கப்படும் என்று கூறப்படுகிறது.