மூன்று உயிருக்கு மூன்று மணி நேரம் செலவு செய்ய முடியாதா? கமலுக்கு கஸ்தூரி கண்டனம்
மூன்று உயிருக்கு மூன்று மணி நேரம் செலவு செய்ய முடியாதா?
சமீபத்தில் நிகழ்ந்த ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து நடந்தபோது படப்பிடிப்பில் இருந்த அனைவரும் சம்மன் அனுப்பி விசாரணை செய்துவரும் நிலையில் நேற்று கமல்ஹாசனிடம் அவர்கள் விசாரணை நடத்தினார்
சுமார் 3 மணி நேரம் கமலஹாசனுடன் நடந்த விசாரணை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. விசாரணைக்கு பின்னர் பேட்டியளித்த கமலஹாசன் விசாரணை நடத்தியது குறித்து ஒரு வார்த்தை கூட செய்தியாளர்களின் தெரிவிக்காமல் சம்பந்தமில்லாமல் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தங்கள் தலைவரிடம் 3 மணி நேரம் விசாரணை செய்த போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. கமலஹாசனின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழக அரசு போலீசார் மூலம் விசாரணை என்ற பெயரில் அவமதிப்பதாகும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிக்கை குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும்.