1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (17:25 IST)

பாஜகவில் இணைந்த தமிழ் நடிகரை செல்பி எடுத்து வரவேற்ற குஷ்பு!

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று நடிகர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைந்துள்ளார். இன்று சென்னைக்கு வருகை தந்த பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டு அவரிடம் இருந்து பாஜக உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாஜகவில் இணைந்த நடிகர் சுப்பு பஞ்சுவை வரவேற்ற நடிகை குஷ்பு அவருடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து பாஜகவில் சுப்பு பஞ்சு அவர்களை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை’, ‘கலகலப்பு’ உள்பட பல திரைப்படங்களில் சுப்பு பஞ்சு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது