Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியா பற்றி பேசுவதை நிறுத்துங்கள் - நடிகர் சித்தார்த் கோபம்


Murugan| Last Updated: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேறியது அவருக்காக அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான நடிகை ஓவியா, தற்கொலைக்கு முயன்றதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்தி பரவியது. அதன் பின், அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.  ஓவியாவை ஏதோ மனநிலை பாதித்தவர் போல் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
ஆனால், ஓவியாவோ சிரித்துக்கொண்டே வந்து கமல்ஹாசனுடன் பேசிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். எனவே, வெளியான தகவல் அனைத்தும் வதந்தி என்றே தெரிகிறது. மேலும், சமூக வலைத்தளமான டிவிட்டரில் பிக்பாஸ் பற்றியே அதிக கிண்டலான கருத்துகளை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “மனநிலை பாதிப்பு என்பது ஜோக் அல்ல..அதுபற்றி விளையாட்டாக பேசுவது, தண்டிப்பது.. குரூரமான பதிவிடுகளை இடுவது.. வதந்திகள் பரப்புவது அனைத்தும் விளையாட்டல்ல. மாறுங்கள.. கற்றுக்கொள்ளுங்கள்” எனக் கோபமாக தெரிவித்துள்ளார். 
 
அவர் பொதுவாக குறிப்பிட்டிருந்தாலும், ஓவியா மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளவர்கள் பற்றித்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. 


Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :