செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (13:02 IST)

ரூ.200 கோடி… ஆவின் தீபாவளி டார்கெட்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.


இந்த ஆலோசனையில், இம்முறை தீபாவளி பண்டிகைக்கும் காஜூ கட்லீ (250 கி), நட்டி அல்வா (250 கி), மோத்தி பாக் (250 கி), காஜு பிஸ்தா ரோல் (250 கி), நெய் பாதுஷா (250 கி,) கார வகைகள் இனிப்பு தொகுப்பு (500 கி (Combo Box) விற்பனை செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் இனிப்புகளை ஆவின் நிறுவனத்தில் தான் கொள்முதல் செய்யவேண்டும் என அறிவுறுத்தியதை அடுத்து அந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ஆவின் இனிப்புவகைகள் விற்பனையில் சாதனைப் படைத்தது. 

அதே போல கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82.00 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது.