Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட் - ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு


Murugan| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (16:16 IST)
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 225 மி.லிட்டரில் ரூ.10க்கு பால் பாக்கெட்டை ஆவின் பால் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

 
தனியார் பாலில் கலப்படம் இருப்பதாகவும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்து பரபரப்பை உண்டாக்கியவர் ராஜேந்திர பாலாஜி. ஆனால், அவரின் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. மேலும், ஆதரமில்லாமல் புகார் தெரிவிக்கக்கூடாது என கருத்து தெரிவித்த நீதிமன்றம், அவர் அப்படி புகார் கூறுவதற்கும் சமீபத்தில் தடை விதித்தது.
 
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.10 விலையில் 225 மில்லி லிட்டர் அளவுக்கு பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :