திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (15:02 IST)

ஓவியாவுடன் அடிக்கடி அவுட்டிங் - ஆரவ் ஓப்பன் டாக்

நடிகை ஓவியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவருடன் அடிக்கடி வெளியே செல்வதாகவும் நடிகர் ஆரவ் ஒப்புக்கொண்டுள்ளார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் ஆரவ் மீது நடிகை ஓவியா காதல் கொண்டதே அதற்கு காரணம். ஓவியாவின் காதலை நிராகரித்தது, அதனால், ஓவியா தற்கொலை முயன்றது, ஓவியாவிற்கு ஆரவ் மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டது என பிக்பாஸ் வீட்டில் நடந்த காதல் காட்சிகள் சினிமாவை மிஞ்சியது.
 
இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆரவ் “நான் இப்போதும் ஓவியாவுடன் தொடர்பில் இருக்கிறேன். அடிக்கடி அவரிடம் பேசுகிறேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அடிக்கடி அவுட்டிங் செல்கிறோம். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் ஒரு என்.ஜி.ஓ-வை தொடங்கியுள்ளேன். அதை என் நண்பர்கள் கவனித்து கொள்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வதே எங்கள் நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.