புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 1 மே 2019 (15:21 IST)

' பேரன்பைப் பெற்றவர் நடிகர் அஜித்குமார் ’ - துணைமுதல்வர் புகழாரம்

தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆரம்பகாலத்தில் யாரும் உதவி செய்யாத போது தனது சொந்த உழைப்பால் கடுமையான முயற்சியால் சினிமாவில் கதாநாயகனாக உயர்ந்தார். 
இதனாலேயே அஜித்தை ரசிகர்கள் பலரும் தங்கள் நெஞ்சில வைத்துச் சுமக்கிறார்கள். இத்தனை பலம் கொண்ட தனது ரசிகர் மன்றத்தை சில வருடங்களுக்கு முன்னர் அஜித் கலைத்துவிட்டு, ரசிகர்களிடம்’’ உங்கள் அப்பா, அம்மாவிற்கு சேவை ஆற்றுங்கள் என்று வெளிப்படையாகக் கூறினார்.’’ இந்த தைரியமான முடிவை பல நடிகர்களும் எடுக்கத் தயங்கும் போது அஜித் எடுத்ததால் அவர் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக விட்டார் என்றே சொல்லலாம்.
 
இத்தனை பெருமைகள் கொண்ட வீரமான நடிகர் அஜித்துக்கு இன்று உழைப்பாளர் தினத்தில்(மே 1 நாளில் )பிறந்தநாள்! ஆதலால்  அவரது பிறந்த நாளை அவரது விசுவாசமான ரசிகர்கள் ஆசை ஆசையாய் கொண்டாடி வருகின்றனர். 
 
தற்போது  டுவிட்டரில்  அவது பெயரில், ஹேப்பி பர்த்டே தல , ஹேப்பி பர்த்டே அஜித்குமார் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். அது இந்திய அளவில் டிரண்டிங் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தின் துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. ப்ன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமார் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி ஒரு பதிவிட்டுள்ளார்.
 
அதில் , “எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDAjithkumar ” என்று கூறியுள்ளார்.

 
இந்தப் பதிவிற்கு  பெரும்பாலானவர்கள் லைக்குகள் போட்டு வருகின்றனர்.