1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (18:19 IST)

ஆதார் கட்டாயம்: TNPSC தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள்!!

முறைகேடுகளை தடுக்க  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் 6 மாற்றங்கள் செய்துள்ளது அரசு. 
 
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை நடத்தியது. இதில் முறைகேடு நடைப்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுப்பட்ட பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் 6 மாற்றங்கள் செய்துள்ளது அரசு. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் பின்வருமாறு... 
 
1. தேர்வு எழுதும் நபர்களின் விவரம் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும் 
2. தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்
3. தேர்வு எழுதும் மையங்களை தேர்வாணையமே இனி தேர்வு செய்யும்
4. டிஎன்பிஎஸ்சிக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் கட்டாயம்
5. முறைகேடுகள் இருப்பின் முன்கூட்டியே கண்டறியும் உயர் தொழில்நுட்பத் தீர்வு நடைமுறைப்படுத்தப்படும்
6. தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதி