1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (16:45 IST)

ஸ்டாலினுக்காக கலைக்கட்டும் தூங்கா நகரம்: திமுகவுக்கு கூடும் பலம்!!

மதுரையில் வரும் 23 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகிறார்.
 
உள்ளாட்சி தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் சந்தித்து பேசினார். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகவும் ராஜ.கண்ணப்பன் பேட்டி அளித்ததார்.   
 
ராஜ கண்ணப்பனின் வரவை திமுக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அக்கட்சியில் இருந்து அவர் வெளியேறினார் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், மதுரையில் வரும் 23 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகிறார். இந்த இணைப்பை கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அதிலும் ராஜ கண்ணப்பன் நேரடியாகவே இதனை மேற்பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.