வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (08:26 IST)

பிறந்தநாளன்றே உயிரிழந்த பெண் செய்தியாளர்

திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் பெண் செய்தியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த அங்கையற்கரசி என்பவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வருகிறார். 
 
இந்நிலையில் அங்கையற்கரசி மற்றும் அவருடன் பணிபுரியும் சக ஊழியர்களான ஷாலினி, சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபுராஜ் ஆகியோர் விடுமுறையை கழிக்க திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள அங்கையற்கரசி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
 
விடுமுறையை ஆனந்தமாக கொண்டாடிய ஷாலினி, சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபுராஜ் ஆகியோர் மட்டும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பொட்டிகுளம் அருகே எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலே ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
ஷாலினியின் பிறந்தநாளான நேற்றே அவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.