திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 ஜூலை 2018 (08:14 IST)

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 128 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 128 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வரும் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பலுசிஸ்தான் அவாமி என்ற கட்சி பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் பரப்புரை நடத்திக் கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவன் தான் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.
 
இந்த விபத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேட்பாளர் நவாப்ஸதா உட்பட 128 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.