வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் தமிழகம் நோக்கி நகரத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் கடும் மழை மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
ஆனால் இது வலுவடைய தாமதமாகி வந்தது. தற்போது இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி, காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மெல்ல தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று முதல் தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K