செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:25 IST)

பழைய உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்த உணவகம் மூடல்

old food
காரைக்குடியில் உள்ள ஒரு உணவகத்தில் பிரிட்ஜில், பழைய நண்டு கிரேவி, மட்டன் கிரேவிகள் இருந்த நிலையில், அவற்றை  அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

ஓட்டல்களில் சிலவற்றில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதை பற்றி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி   நேரடியாக ஆய்வில்  ஈடுபட்டு, இதுபற்றி தகவல் வெளியிட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் பிரபல ஓட்டலில் சாம்பாரில் பேப்பர் இருந்தது பற்றிய புகைப்படம் வைரலானது.

இந்த நிலையில், காரைக்குடியில் பழைய உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்த உணவகம் மூடப்பட்டுள்ளது.

காரைக்குடியில், திறந்தவெளி சாக்கடை அருகே வைத்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், பழைய உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்துவந்ததாக எழுந்த புகாரின் பேரில் இன்று அதிகாரிகள் அதிரவு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பிரிட்ஜில், பழைய நண்டு கிரேவி, மட்டன் கிரேவிகள் இருந்த நிலையில், அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர்.

இந்த உணவகத்தை  ஐந்து நாட்கள் மூடி பிரச்சனையை சரிசெய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.