ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (17:01 IST)

சென்னையில் தயாராகி வரும் மிதக்கும் உணவகம்

flooding hotel
சென்னையில் தயாராகி வரும் மிதக்கும் உணவகம் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உலகின் 2 வது  நீளமான மெரினா கடற்கரை, தலைவர்களின் நினைவிடம், எக்மோர் அருங்காட்சியகம், அண்ணா நூலகம் , வ உயிரியல் பூங்கா என பல சுற்றுலாதளங்கள் உள்ளன. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றிப்பார்க்க மக்கள் நாள்தோறும் வருகின்றனர்.

இந்த  நிலையில்,முட்டுக்காடு படகு இல்லத்தில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள மிதவை படகு, அதிவேக படகு சவாரி செய்கின்றனர். இங்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு  அரசு ரூ. 5 கோடி மதிப்பில் மிதக்கும் கப்பல் உணவகம் அமைத்து வருகிறது. இது 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் இரண்டு அடுக்கு உணவகம் அமையவுள்ளது. இதற்கு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.