1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (17:50 IST)

தமிழக முதல்வர் மீது போலீஸ் புகார் அளித்த எம்பி மற்றும் எம்.எல்.ஏ! பெரும் பரபரப்பு

தமிழக முதல்வர் மீது போலீஸ் புகார் அளித்த எம்பி மற்றும் எம்.எல்.ஏ
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து சேலம் சென்றார். இந்த நிலையில் ஊரடங்கும் மீறி முதல்வர் சேலம் சென்றதாக அவர் மீது எம்பி பார்த்திபன் மற்றும் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் சேலம் போலீசில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சேலம் மாவட்டம் கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணி குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனாவை தடுப்பது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன 
 
இந்த நிலையில் இந்த கூட்டம் முடிந்த பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி ’வரும் திங்கட்கிழமை முதல் எந்தெந்த தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்கும் என்பதை தெரிவிக்க இருப்பதாக கூறினார். மேலும் சேலம் மாவட்டத்தில் கொரோனா தாக்கமுள்ள 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னையிலிருந்து சேலத்திற்கு ஊரடங்கு உத்தரவை மீறி சென்றதாக அவர் மீது எம்பி பார்த்திபன் மற்றும் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் சேலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றார் என்றும் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எங்கும் செல்லலாம் அதில் தவறு இல்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்