செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (08:45 IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் இரண்டு முட்டை! சேலம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை!

சேலத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் 2100 தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் இரண்டு முட்டை வழங்க சேலம் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஊர் முழுவதும் சானிட்டைசர்கள் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்

சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம் பட்டி ஆகிய 4 மண்டலங்களிலும் மொத்தம் 2,100 தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக மாவட்ட ஆட்சியர் மளிகைப் பொருட்கள் வழங்கினார். நேற்று முதல் அவர்களுக்கு தினமும் உணவில் இரு வேளை முட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வாரம் இருமுறை கொரோனா தொற்று இருக்கிறதா என்ற சோதனையும் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.