1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (10:04 IST)

தேர்வில் காப்பியடித்த ஐபிஎஸ் அதிகாரி டிஸ்மிஸ்

ஐஏஸ் தேர்வில் புளூடூத் மூலம் ஹைடெக்காக காப்பியடித்து கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐபிஎஸ் அதிகாரி, சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். 
 
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் கலந்துகொண்ட சபீர் புளூ டூத் வைத்து காப்பி அடித்த போது கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சபீர்கரீமை ஐபிஎஸ் பதவியிலிருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது.