செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (14:14 IST)

காஷ்மீரில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு!

காஷ்மீரில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சமப்வம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் காஷ்மீரில் புஜ்வாலா என்பவரின் 7-வயது மகள் ஆஷிபா மர்மமான முறையில் கடத்தப்பட்டு, காமுகர்கள் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியது. அந்த சிறுமியின் கொலைக்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் காஷ்மீரில் மேலும் ஒரு  சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது