ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 20 ஜூலை 2024 (08:28 IST)

டிவி, ஃபேனை தூக்கி போட்டு உடைத்து போராட்டம்.. அன்புமணி மீது வழக்குப்பதிவு..!

Anbumani
மின் கட்டண உயர்வை எதிர்த்து டிவி, ஃபேன், தொலைக்காட்சி ஆகியவற்றை தூக்கி போட்டு உடைக்கும் போராட்டம் நடத்தியதை அடுத்து அன்புமணி உள்பட பாமகவினர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டது என்பதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று கூறியது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் திமுக கூட்டணி கட்சிகள் இது குறித்து வாயை திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் இன்று பாமக நடத்திய போராட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தின் போது இலவச தொலைக்காட்சி மின்விசிறியை தூக்கி போட்டு உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சென்னை எழும்பூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran